Thursday, May 21, 2009

ஏன்??




அது தான் பிடிக்கவில்லை என்றாயே.........
பிறகேன் வந்து வந்து போகிறாய்.................................என் நினைவுகளில்??!

குற்றம்?!




பேசும் பொழுது உயிரை ஊடுருவிப்பார்த்தும்
நான் அசடு வழியும் போது களுக்கென்று சிரித்தும்
என் தனிமையை போக்கி இனிமை தந்தும்
நீ கனவில் வரவேண்டும் என்றே கனவு காண வைத்ததும்
ஒவ்வொரு நாளும் உன் பெயர் நூறு முறை சொல்ல வைத்ததும்
எழுதாத பேனாவால் உன் பெயர் எழுத வைத்ததும்
உலகம் மறந்து உன் முகம் எண்ணி பார்க்கவும் வைத்தது -
உன் குற்றம்..............
பணம் திருடினால் கண்டிக்க காவல் நிலையம் உள்ளது
என் மனம் திருடிய உன்னை கண்டிக்க காதல் நிலையம் வேண்டும் எனக்கு.

கொக்கரக்கோ.....




தினமும் கொக்கரக்கோ என்றேன்
ஒரு நாள் குக்கருக்குள் வெந்தேன்!!!......

தோழி.......

வகுப்பறையில் திரும்பி பார்க்கும் போதும்
உணவுகளை பகிர்ந்து உண்ணும் போதும்
காரணம் இன்றி வாழ்த்து அட்டைகள் பரிமாற்றும் போதும்
காரணம் இருந்தும் வார்த்தைகள் பரிமாரா பொழுதும்
கடற்கரை மணலில் பெயர் எழுதி விளையாடும் பொழுதும்
திரை அரங்க இருளில் தோள்கள் உரசி அமரும் பொழுதும்
நம் வீட்டுக்கு தெரியாமல் இருக்க பொய் சொல்லும் பொழுதும்
என்றேனும் உணர்ந்ததுண்டா...............நானும் உன்னை நேசிப்பதை!.........

மனித தேனீக்கள்

அதிகாலை முன்எழுந்து, அவசரமாய் நீராடி,
ஓடிச்சென்று பேருந்து பிடித்து,
பகல் முழுதும் கூவி படித்து
மாலை தோரும் தனிப்பாடம் கற்று
இரவு நேரம் வீட்டுப்பாடம் முடித்து
மறுநாளை நோக்கி சலிப்புடன் துயிலும்
நம் வீட்டு சிறுவர்கள் புத்தக மூட்டையான
தேன்கூட்டையே சுமக்கும் தேனிக்கள்.

காதல் ரோஜா.....




தண்டவாளத்தில் தலை சாய்த்து பூத்திருக்கும்
ஒற்றை பூ என் காதல் - நீ
நடந்து வருகிறாயா, ரயிலிலா?!..............

- பழனிபாரதி

Sunday, May 17, 2009

விஸ்வரூபம்




விலகிச்செல்ல செல்ல புள்ளியாய் மாறும் என்கிறார்கள்
உன் நினைவுகள் மட்டும் ஏன் விஸ்வரூபம்!!!??.........

Saturday, May 9, 2009

என்னுயிரே.......


அன்னம் ஒத்த நடை என்றேன்
கொடியை போன்ற இடை என்றேன்
கார்மேகமாய் கூந்தல் என்றேன்
வான் நீலமாய் விழிகள் என்றேன்
வில்லை போல புருவம் என்றேன்
ஒரு கிளியை போல உருவம் என்றேன்
சிப்பியாய் இருக்கும் இதழ்கள் உள்ளே
முத்துப் போன்ற பற்கள் என்றேன்......

இப்படி இயற்கையோடு
ஒப்பிட்டதால் தானோ என்னவோ பெண்ணே
இயற்கை "எய்த" தூண்டினாய் என்னை....

- நான்

அம்மா.......




சிறியதாய் ஒரு கவிதை எழுதச் சொன்னார்கள்,
எழுதினேன் - "அம்மா" என்று.
இன்னும் சிறியதாய் எழுதியிருப்பேன். "நீ" என்று.
கேட்டது என் தாயாக இருந்திருந்தால்

- எங்கோ படித்தது

Friday, May 8, 2009

தேவதை










உன்னை தேவதை என்றதாலோ என்னவோ
தேட வைத்து வதைக்கிறாய் என்னை........

Thursday, May 7, 2009

கேள்வி


தேடிச் சோறு நிதந்தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ !!

- மகாகவி பாரதியார்

காதல் தோல்வி




நீ இருந்தால் தான் வாழ முடியும் என்று
எல்லோரை போலவும் நான் உளர மாட்டேன்
நீ இல்லாமல் வாழ்வது எப்படி என்று மட்டும்
சொல்லிக்கொடு.................
மணக்க வேண்டி விரும்பவில்லை உன்னை
விரும்பியதால் மணக்கத்துடிக்கிறேன்.

- நான்

Wednesday, May 6, 2009

லஞ்சம்




வாங்கினேன்...........பிடித்தார்கள்.
கொடுத்தேன்...........விட்டார்கள்.


- எங்கோ படித்தது

பிணந்திண்ணி




காட்டில் பதுங்கி ஓடித்திரிந்து
கண்டதும் வேகம் எடுத்து
ரத்தம் பீறிட்டு ஒழுக
கொன்று கிழித்து உண்ணும்
மாமிசப்பட்சினி

ரோட்டில் அலைந்து தேடித்திரிந்து
கண்டதும் பணம் எடுத்து - அதைக்கொண்டு
அறை கிலோ பிணம் எடுத்து
வீட்டில் கழுவி சமைத்து உண்ணும்
நானும், இதை படிக்கும் நண்பா நீயும்
இயற்கையின் படைப்பில் பிணந்திண்ணிகள் தானே?!

- நான்

கருச்சிதைவு





துள்ளித்திரியும் காலத்தில் யாரும் அறியாமல்
பள்ளியறை விளையாட்டின் பரிசை,
அழிக்க நடத்தும் கருக்கலைப்பு
சட்டத்தின் பார்வையில் குற்றம்.
ஆனாலும் பலரது கண்முன்னே
தொடர்ச்சியாய் நடக்கும் கருக்கலைப்பு.
சட்டம் ஒன்றும் செய்யாது.
மீசைக்காரனின் மிலிடரி ஹோட்டலில் ஆம்லெட்.

- நான்

Tuesday, May 5, 2009

இருட்டுப்பயணம்


காவிரி நதி நீர் மறுக்க படும்
பாலாற்றில் புது அணை கட்டப்படும்
தமிழனுக்கு எதிராக ஆயுதம் அனுப்பப்படும்
தமிழன் என்றாலே எம் பிரதமருக்கு வாய் மூடிவிடும்
எங்கள் பிரச்னை கசக்கும்
எமது ஒட்டு மட்டும் இனிக்கும்
ஒரு சீக்கியன் அடி பட்டாலும் கண்டனம் தெரிவிப்பார்
லட்சம் தமிழர் மடிந்தாலும் வேடிக்கை பார்பார்
எம் மாநிலத்தில் எந்த அந்நியரும் பாதுகாப்பாய் இருப்பார்
எம் மொழியினரோ அண்டை மாநிலத்தில் பயந்து பயந்து வாழ்வார்
பணம் இல்லாவிட்டாலும் வேற்றானுக்கு ஊர்வலம்
கோடிகள் இருந்தாலும் தமிழன் என்றால் கேவலம்
இந்த அழகில் எப்படி சொல்ல முடியும் நான் இந்தியன் என்று..........!!!!!!!!!!!!!

- நான்