Thursday, November 26, 2009

மறதி!!!!



உன்னை மறந்து விட்டேன் என்பதையும் மறந்து
உன்னை நினைத்து கொண்டிருக்கிறேன்!!!!!

- நான்

Tuesday, October 27, 2009

வேலை


கை நிறைய சம்பளம்
பை நிறைய பொருட்கள்
பிறர் பொறாமை படும் வகையில் வாழ்க்கை
இறுதி வரை நாமே ராஜா என்ற நம்பிக்கை......
கணிப்பொறி துறையில் படித்த அவனுக்கு
கொடுத்தார்கள் இப்படி வாக்குறுதிகள்
இன்றும் அவன் கனவு காண்கிறான்.
வேலை சந்தோஷமாக இருக்கும் என்று ............

- யாரோ

Friday, June 5, 2009

உலகம்.....


கத்தும் தவளையாய் இன்றி பாடும் குயிலாய் இரு-
உலகம் உன்னை விரும்பும்

வெட்டும் கத்தியாய் இல்லாமல் சேர்க்கும் ஊசியாய் இரு-
உலகம் உன்னை போற்றும்

நண்பனை விரோதிக்காமல் எதிரியை நட்பு செய் -
உலகம் உன்னை மெச்சும்

கெட்டதை செய்யாமல் நல்லதை மட்டுமே செய்துப்பார் -
உலகம் உன்னை ஏமாற்றும்

உன்னை பற்றிய நிழல்களை மறைத்து உன்னிடம் இல்லாத
நிஜங்களை சொல்லிப்பார் -
உலகம் உன்னை காப்பாற்றும்

தீயவைகளை கண்டு பொறுக்காமல் பொங்கி எழு-
பின் எழ உயிர் இருக்காது. உன் பெயர் சரித்திர புத்தகத்தில் இடம் பெரும்

- நான்

நீ.....


நண்பனுக்கு விட்டு கொடுப்பதை விட
விரோதிக்கு விட்டுக்கொடுத்து பார்
உன் உயர்வு வெளிப்படும்

பிச்சைகாரனுக்கு கொடுப்பதைவிட
துன்பப்படுபவனுக்கு கொடுத்துப்பார்
உன் கொடை உள்ளம் வெளிப்படும்

நல்லவனை மன்னிப்பதை விட
தீயவனை மன்னித்துப்பார்
உன் பெருந்தன்மை வெளிப்படும்

மற்றவரை நம்பி வாழ்வதை விட
உன்ன நம்பி வாழ்ந்துப்பார்
உன் திறமை வெளிப்படும்

உன் குறைகளை எண்ணிப்பார்பதை விட
நிறைகளை எண்ணிப்பார் - அப்போது
உனக்குள் இருக்கும் நீ வெளிப்படுவாய்.

- நான்

தாயின் மறுபக்கம்




என் தாயும் கொடுமைக்காரிதான்
என்னை காற்றும் ஒளியும் இல்லாத
சிறையில் அடைத்தாளே...........
பத்து மாதங்கள்.

ஏழை....





வீட்டை விட்டு வெளியே ஓடினான் -
மழையில் நனையாமல் இருக்க

நம்பிக்கை


கடின உழைப்பில் வியர்வை இழக்கலாம்
லட்சியம் கருதி உன் உறக்கம் இழக்கலாம்
உயிர்களை காக்க இரத்தம் இழக்கலாம்
ஏழைக்கு உணவளிக்க பணத்தை இழக்கலாம்
அவன் மானம் காக்க சில உடைகள் இழக்கலாம்
நேர்மை காக்க உன் நண்பர்களை இழக்கலாம்
நல்ல செயலுக்காக உன் நேரத்தை இழக்கலாம்
பிறரை மகிழ்விக்க உன் சிரிப்பை இழக்கலாம்
குழந்தைக்காக உன் உயிரையும் இழக்கலாம்
ஆனால்...........
உன் உயிர் உள்ளவரைக்கும் நம்பிக்கை மட்டும் இழந்துவிடாதே.

- நான்

அம்மாவின் அவர்!

எதற்கெடு அம்மா வேணும்
அப்பாவிற்கு
சகலவிதமான பசி தீர்க்க
கை கால் பிடித்து விட
வைகறையில் எழுப்ப
உதைத்து வசைபாடி
கோபம் தணிக்க
கோவணம் துவைக்க
என எதற்கெடுத்தாலும்......

எதற்கும் தேவை இல்லை அப்பா
அம்மாவிற்கு
விடியலில் வாசல் தெளித்து
கோலம் போட
சுள்ளி பொருக்கி சோறு சமைக்க
எனக்கு நிலாச்சோறு ஊட்ட
இரவுமட்டுமறிய அழ
இப்படி எதற்கும்

எனினும் அம்மா சொல்கிறாள்
"எனக்கெல்லாமே அவருதாங்க"

- பெ. கனகராசு

ஆதலால்.......


கண்கள் இருக்கும் இடத்தில் பட்டாம்பூச்சிகள் இருந்ததால் உனக்கு -
இதயம் இருக்கும் இடத்தில் எதுவும் இல்லை எனக்கு!!!!!.........

Thursday, May 21, 2009

ஏன்??




அது தான் பிடிக்கவில்லை என்றாயே.........
பிறகேன் வந்து வந்து போகிறாய்.................................என் நினைவுகளில்??!

குற்றம்?!




பேசும் பொழுது உயிரை ஊடுருவிப்பார்த்தும்
நான் அசடு வழியும் போது களுக்கென்று சிரித்தும்
என் தனிமையை போக்கி இனிமை தந்தும்
நீ கனவில் வரவேண்டும் என்றே கனவு காண வைத்ததும்
ஒவ்வொரு நாளும் உன் பெயர் நூறு முறை சொல்ல வைத்ததும்
எழுதாத பேனாவால் உன் பெயர் எழுத வைத்ததும்
உலகம் மறந்து உன் முகம் எண்ணி பார்க்கவும் வைத்தது -
உன் குற்றம்..............
பணம் திருடினால் கண்டிக்க காவல் நிலையம் உள்ளது
என் மனம் திருடிய உன்னை கண்டிக்க காதல் நிலையம் வேண்டும் எனக்கு.

கொக்கரக்கோ.....




தினமும் கொக்கரக்கோ என்றேன்
ஒரு நாள் குக்கருக்குள் வெந்தேன்!!!......

தோழி.......

வகுப்பறையில் திரும்பி பார்க்கும் போதும்
உணவுகளை பகிர்ந்து உண்ணும் போதும்
காரணம் இன்றி வாழ்த்து அட்டைகள் பரிமாற்றும் போதும்
காரணம் இருந்தும் வார்த்தைகள் பரிமாரா பொழுதும்
கடற்கரை மணலில் பெயர் எழுதி விளையாடும் பொழுதும்
திரை அரங்க இருளில் தோள்கள் உரசி அமரும் பொழுதும்
நம் வீட்டுக்கு தெரியாமல் இருக்க பொய் சொல்லும் பொழுதும்
என்றேனும் உணர்ந்ததுண்டா...............நானும் உன்னை நேசிப்பதை!.........

மனித தேனீக்கள்

அதிகாலை முன்எழுந்து, அவசரமாய் நீராடி,
ஓடிச்சென்று பேருந்து பிடித்து,
பகல் முழுதும் கூவி படித்து
மாலை தோரும் தனிப்பாடம் கற்று
இரவு நேரம் வீட்டுப்பாடம் முடித்து
மறுநாளை நோக்கி சலிப்புடன் துயிலும்
நம் வீட்டு சிறுவர்கள் புத்தக மூட்டையான
தேன்கூட்டையே சுமக்கும் தேனிக்கள்.

காதல் ரோஜா.....




தண்டவாளத்தில் தலை சாய்த்து பூத்திருக்கும்
ஒற்றை பூ என் காதல் - நீ
நடந்து வருகிறாயா, ரயிலிலா?!..............

- பழனிபாரதி

Sunday, May 17, 2009

விஸ்வரூபம்




விலகிச்செல்ல செல்ல புள்ளியாய் மாறும் என்கிறார்கள்
உன் நினைவுகள் மட்டும் ஏன் விஸ்வரூபம்!!!??.........

Saturday, May 9, 2009

என்னுயிரே.......


அன்னம் ஒத்த நடை என்றேன்
கொடியை போன்ற இடை என்றேன்
கார்மேகமாய் கூந்தல் என்றேன்
வான் நீலமாய் விழிகள் என்றேன்
வில்லை போல புருவம் என்றேன்
ஒரு கிளியை போல உருவம் என்றேன்
சிப்பியாய் இருக்கும் இதழ்கள் உள்ளே
முத்துப் போன்ற பற்கள் என்றேன்......

இப்படி இயற்கையோடு
ஒப்பிட்டதால் தானோ என்னவோ பெண்ணே
இயற்கை "எய்த" தூண்டினாய் என்னை....

- நான்

அம்மா.......




சிறியதாய் ஒரு கவிதை எழுதச் சொன்னார்கள்,
எழுதினேன் - "அம்மா" என்று.
இன்னும் சிறியதாய் எழுதியிருப்பேன். "நீ" என்று.
கேட்டது என் தாயாக இருந்திருந்தால்

- எங்கோ படித்தது

Friday, May 8, 2009

தேவதை










உன்னை தேவதை என்றதாலோ என்னவோ
தேட வைத்து வதைக்கிறாய் என்னை........

Thursday, May 7, 2009

கேள்வி


தேடிச் சோறு நிதந்தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ !!

- மகாகவி பாரதியார்