அப்பாவிற்கு
சகலவிதமான பசி தீர்க்க
கை கால் பிடித்து விட
வைகறையில் எழுப்ப
உதைத்து வசைபாடி
கோபம் தணிக்க
கோவணம் துவைக்க
என எதற்கெடுத்தாலும்......
எதற்கும் தேவை இல்லை அப்பா
அம்மாவிற்கு
விடியலில் வாசல் தெளித்து
கோலம் போட
சுள்ளி பொருக்கி சோறு சமைக்க
எனக்கு நிலாச்சோறு ஊட்ட
இரவுமட்டுமறிய அழ
இப்படி எதற்கும்
எனினும் அம்மா சொல்கிறாள்
"எனக்கெல்லாமே அவருதாங்க"
- பெ. கனகராசு
No comments:
Post a Comment
இங்கு படித்தவை பிடித்திருந்தால்.......கிழே தங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.....
பிடிக்கவில்லை எனில் கற்று கொடுங்கள். நன்றி
- அககினிப்பழம்