அதிகாலை முன்எழுந்து, அவசரமாய் நீராடி, ஓடிச்சென்று பேருந்து பிடித்து, பகல் முழுதும் கூவி படித்து மாலை தோரும் தனிப்பாடம் கற்று இரவு நேரம் வீட்டுப்பாடம் முடித்து மறுநாளை நோக்கி சலிப்புடன் துயிலும் நம் வீட்டு சிறுவர்கள் புத்தக மூட்டையான தேன்கூட்டையே சுமக்கும் தேனிக்கள்.
சமூகத்தில் நடக்கும் வெட்கக்கேடுகளை தினம் கண்டு, எதுவும் செய்ய திராணி அற்று, கணம் தோறும் புலம்பும் ஒரு சாமான்ய தமிழ் குடி நான்.
இயற்கையில் உள்ள சிறு சிறு விஷயங்களிலும் அழகை காணத்துடிக்கும் ஒரு சிறிய பறவை நான்.
என்றேனும் ஒரு நாள் பலித்துவிடும் என்ற நம்பிக்கையில் நாள்தோறும்
கனா காணும் ஒரு அற்ப மானிடன் நான்.
ஆசை, இன்பம், துன்பம், வெறுப்பு, வலி எல்லாம் கொண்ட மனிதர்களின் ஒரு சிறிய உணர்ச்சி துளி நான்..............
indru theenkootai(buthagamootai) sumapavargal than nallai amm naatiye sumaka pogiravargal
ReplyDelete